தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு

1 mins read
e2e919c7-f766-45ac-a75b-4938a953d17a
தமிழ்நாடு பிராணிகள் நலவாரியம் சார்பில் மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னையில் அடுத்த ஒரு மாதத்தில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். “பிராணிகளை வளர்ப்போர் பாதுகாப்பற்ற முறையில் அவற்றை வெளியில் கொண்டு சொல்லக் கூடாது என பலமுறை எச்சரித்தும் அலட்சியமாக உள்ளனர். சட்டங்கள் செல்லப் பிராணிகளுக்கு சாதகமாக இருந்தாலும் கூட, மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்போது, பிராணிகளை வளர்ப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

நாயை நாய் என்று சொல்லக்கூடாது, குழந்தை என்று சொல்ல வேண்டும் என ஆர்வலர்கள் கூறுகின்றனர். நம் குழந்தையை, மற்றொரு குழந்தையை நாய் கடிக்க விடுவோமா என அவர்கள் சிந்திக்க வேண்டும். விலங்குகள் நல ஆர்வலர்களுடன் கலந்துபேசி, நீதிமன்றத்தை அணுகி, எத்தகைய கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என முடிவெடுக்கப்படும். “சென்னையில் கடைசியாக 2018ஆம் ஆண்டு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போது 57,000 நாய்கள் இருந்தன. தற்போது எங்களது கணிப்பின்படி, 2 லட்சத்துக்கு மேல் தெருநாய்களின் எண்ணிக்கை இருக்கும். விரைவில் விலங்குகள் நல வாரியத்துடன் இணைந்து ஒரு மாதத்தில் அனைத்து வார்டுகளிலும் நாய்கள் கணக்கெடுப்பை தொடங்க இருக்கிறோம்.” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்