சென்னை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதும் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கட்சி (திமுக) தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், திமுக வேட்பாளர்கள் 36 தொகுதிகளில் தொடக்கம் முதலே முன்னிலை வகித்தனர்.
இந்நிலையில், இந்திய நேரப்படி காலை 11 மணியளவில் (சிங்கப்பூரில் பிற்பகல் 1.30), திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தொண்டர்கள் திரளாகக் கூடினர்.
அப்போது பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
இன்னும் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகவில்லை என்றாலும் தமிழகத்தில் திமுகவின் ஆதிக்கம்தான் நீடிக்கும் என அக்கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.