சென்னை: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பெரும் வெற்றி பெற்று மீண்டும் மக்களவை உறுப்பினராகத் தேர்வாகி உள்ளார் கனிமொழி.
இம்முறை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், தூத்துக்குடி தொகுதி முடிவுகள்தான் அதிகாரபூர்வமாக முதலில் அறிவிக்கப்பட்டது.
இம்முறை, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, நாம் தமிழர் சார்பில் ரோவெனா ரூத் ஜான், தமாகா சார்பில் விஜயசீலனும் களமிறக்கப்பட்டனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவில், இரண்டாம் இடம் பிடித்த அதிமுக வேட்பாளரைவிட 2.83 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கனிமொழி.
இம்முறை தமிழகத்தில் இருந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் கனிமொழியும் ஒருவர் ஆவார்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக எழுத்தாளரான சு.வெங்கடேசன் 1,90,705 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில் சு.வெங்கடேசன் 3,61,287 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்ற அதிமுக வேட்பாளர் சரவணன் 1,70,582 வாக்குகளும் பெற்றனர்.
திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் 4.43 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதேபோல், தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார்.

