தமிழகத்தில் பதிவான 4.5 லட்சம் ‘நோட்டா’ வாக்குகள்

தமிழகத்தில் பதிவான 4.5 லட்சம் ‘நோட்டா’ வாக்குகள்

1 mins read
6a7a7f87-f3f6-4859-906f-c35b89487385
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலின்போது 4.5 லட்சம் வாக்குகள் ‘நோட்டா’ வாக்குகளாக பதிவாகி உள்ளன - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலின்போது 4.5 லட்சம் வாக்குகள் ‘நோட்டா’ வாக்குகளாக பதிவாகி உள்ளன.

நோட்டாவுக்கு ஆக அதிகமாக 26,450 வாக்குகள் ஸ்ரீபெரும்பதூரில் பதிவாகி உள்ளன.

ஒரு தொகுதியில் எந்த வேட்பாளரும் தங்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தவில்லை எனில் வாக்காளர்கள் ‘நோட்டா’வுக்கு வாக்களிக்கலாம். அந்த வாக்குகள் எந்த வேட்பாளருக்கும் கிடைக்காது.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது மாநிலம் முழுவதும் 4,61,327 வாக்குகள் பதிவாகி உள்ளன.

திண்டுக்கல் தொகுதியில் 22,120 வாக்குகளும் திருப்பூரில் 17,737 வாக்குகளும் நோட்டாவுக்குப் பதிவாகி உள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்