நீட் தேர்வை ரத்து செய்க: பாமக வலியுறுத்து

நீட் தேர்வை ரத்து செய்க: பாமக வலியுறுத்து

1 mins read
454094a2-dc1b-4378-9829-8fb27a52d95b
பாமக நிறுவனர் ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: நடப்பாண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஏற்கெனவே நடந்து முடிந்துள்ள நிலையில் அதை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வில் சில மாணவர்களுக்கு மட்டும், எந்த வகையிலும் சாத்தியமற்ற வகையில் மதிப்பெண்கள் வாரி இறைக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது என்றும் நீட் தேர்வு எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கங்கள் நிறைவேறவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்தப் புதிய குற்றச்சாட்டு யாருக்கும் பயனளிக்காத நீட் நுழைவுத் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்ற வாதங்களுக்கு வலிமை சேர்த்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்