குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்

குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்

1 mins read
03ac17c8-8593-4e31-843c-570f917afe8a
மாணிக்கம் தாக்கூர். - படம்: ஊடகம்

விருதுநகர்: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாக்கூர்.

அவர் தனக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம்பிடித்த தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனைவிட 4,379 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி உறுதியானதும் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாக்கூர், மத்தியில் இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்போது மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு கிடைக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்