சவுக்கு சங்கர் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை: காவல்துறை

1 mins read
a5f82904-1a9d-4c2d-a033-4bc68a01834f
சவுக்கு சங்கர். - படம்: ஊடகம்

சென்னை: அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை தமிழக அரசு குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துள்ளது.

இந்த நடவடிக்கையின் பின்னணியில் எத்தகைய காழ்ப்புணர்ச்சியும் இல்லை எனக் காவல்துறை கூறியுள்ளது.

குண்டர் சட்டத்தின்கீழ் தனது மகனைச் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து, சவுக்கு சங்கரின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ள காவல்துறை, சங்கரை குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அறிவுரை கழகத்தின் ஆய்வுக்கு தமிழக அரசு அனுப்பி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அறிவுரை கழகத்தை அணுகாமல் சங்கரின் தாயார் நேரடியாக உயர் நீதிமன்றத்தை அணுகி இருப்பதால் அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதைத் தடுக்கவும் சங்கர் மீதான மற்ற வழக்குகளில் அவருக்குப் பிணை கிடைக்க வாய்ப்புகள் இருப்பதால் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் சவுக்க சங்கர் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இதையடுத்து அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்