சென்னை: தமிழகத்தில் அரசுப் பேருந்துகளுக்கான உதிரி பாகங்களை வாங்க போக்குவரத்துக் கழகங்களிடம் போதுமான நிதியில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏறக்குறைய 25 விழுக்காடு பேருந்துகள் இயக்க முடியாத நிலையில் முடங்கிக் கிடப்பதாக அவர் சாடியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக அரசுப் பேருந்துகள் வழியிலேயே பழுதடைந்து நிற்பதும் விபத்துக்குள்ளாவதும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள ராமதாஸ், அரசுப் பேருந்துகளுடன் தொடர்புடைய விபத்துச் சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார்.
“சென்னையில் பேருந்தில் ஓட்டை ஏற்பட்டு பயணி சாலையில் விழுந்து காயமடைந்தது, திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டது, பேருந்து மேற்கூரை தனியாகக் கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகள் வாடிக்கையாகி விட்டன.
“அவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் ஒரே நாளில் ஒரே ஊரில் இரு நகரப் பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளின் இந்த அவல நிலைக்கு தமிழக அரசுதான் காரணம் என ராமதாஸ் சாடியுள்ளார்.

