40 வயதுக்கு மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெற நிபந்தனை

1 mins read
d7c403a9-6546-4028-b432-cb1f34fe78ae
நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவுபெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பிறகே, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது புதுப்பிக்கவோ முடியும். - படம்: இணையம்

நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவுபெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பிறகே, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது புதுப்பிக்கவோ முடியும் என்று தமிழ்நாடு போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் சில இடங்களில் போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

தமிழ்நாடு மருத்துவ மன்றத்தில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை பயன்படுத்தி இனி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழை மின்னணு வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும். இதன்மூலம் போலி மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை முறைகேடாக பயன்படுத்தி வந்தது தடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்