இணையத்தளம் வாயிலாக பால் அட்டை பெற நடவடிக்கை

இணையத்தளம் வாயிலாக பால் அட்டை பெற நடவடிக்கை

1 mins read
891ed951-d562-438b-9179-d88dc3007436
ஆவின் பால் - படம்: இணையம்

சென்னை: ஜுன் மாதத்தில் ஆவின் நிறுவனம் பண பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில் மேம்படுத்தப்பட்ட கட்டண நுழைவாயில் முறையினை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிலருக்கு இணையத்தளம் வாயிலாக பால் அட்டை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனை, உடனடியாக சரிசெய்து இணையத்தளம் வாயிலாக பால் அட்டை வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன இயக்குநர் வினீத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைய நிறுவனம் சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், டிலைட் பால், நிறை கொழுப்புப்பால் ஆகிய பால் வகைகளை பால் அட்டை மூலம் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. அவ்வகையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 4.5 லட்சம் லிட்டர் பால், பால் அட்டை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நுகர்வோர்களுக்கு தேவையான பால் வகைகளை சலுகை விலையில் பெற விரும்புவோர் நேரடியாக வட்டார அலுவலகங்களுக்கு சென்றும் மற்றும் www.aavin.tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் பதிவு செய்தும் ஆவின் பால் பெற்று வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்