‘தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு’ நூல் வெளியீடு

‘தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு’ நூல் வெளியீடு

படம்: ஊடகம்

13 Jun 2024 - 9:12 pm

1 mins read

சென்னை: தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு (Ancient Jain Legacy of Tamil Nadu) என்னும் ருச்சி பிரீதம் எழுதிய நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 13.6.2024ஆம் தேதி வெளியிட்டார்.

தமிழ்நாட்டின் கலை, கட்டடக்கலை மற்றும் கலாசாரத்தில் சமண மதத்தின் தாக்கம் குறித்த நுணுக்கமான விவரங்களுடன், மதத்திற்கு அப்பாற்பட்ட சமண மதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

மேலும், தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியத்திற்கும் சமண மதத்திற்கும்  இடையிலான ஆழமான தொடர்புகளை ஆராய்வதுடன், சமண மதத்தின் நீடித்த செல்வாக்கிற்கு இந்த நூல் சான்றாக விளங்குகிறது.

இந்த நிகழ்வின்போது, சந்தியா பதிப்பகத்தின் உரிமையாளர் நடராஜன், டி.ஆர்.ஏ. நிறுவனத்தின் இயக்குனர் தாமன்பிரகாஷ் ரத்தோட், ரஞ்சித் ரத்தோட், சுதீர் லோடா ஆகியோர் உடனிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்