குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம்: தமிழக அரசு விருப்பம்

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம்: தமிழக அரசு விருப்பம்

1 mins read
08446049-5615-4933-b71f-ef81aaacfbd0
குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. - சித்திரிப்பு படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 2025ஆம் ஆண்டுக்குள் தமிழகம் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவெடுக்கும் என்றார்.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையிலும் பெற்றோரின் சிரமங்களை குறைக்கவும் தமிழக அரசு காலை உணவு திட்டம், முட்டையுடன் கூடிய சத்தான மதிய உணவு, பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி திட்டம் ஆகியவை அமல்படுத்தி உள்ளதாக அமைச்சர் கணேசன் பட்டியலிட்டார்.

“எனவே அனைவரும் இணைந்து குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ் நாட்டை உருவாக்க உழைக்க வேண்டும்,” என்று அமைச்சர் கணேசன் கேட்டுக் கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
காலை உணவுகுழந்தைகள்அமைச்சர்

தொடர்புடைய செய்திகள்