திருச்சி: துபாயில் இருந்து ஜுஸ் மிக்சரில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.83 கோடி மதிப்பிலான 2,579 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு வேலை, சுற்றுலா என்று செல்வோர் தாயகம் திரும்பும்போது தங்கத்தை நூதன முறைகளில் மலக்குடல், பெண்ணுறுப்பு, மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்கள் வழியாக கடத்த முயற்சித்தாலும் அதனை அதிகாரிகள் திறம்பட கண்டறிந்து தங்கத்தை கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர் கொண்டு வந்திருந்த ஜூஸ் மிக்ஸர் இயந்திரத்தில் ரூ.1.83 கோடி மதிப்புள்ள 2.579 கிலோ அளவிலான 24 கேரட் தங்கம் கடத்தி வரப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.


