பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நெடுஞ்சாலைகளில் தனிப்பாதை கோரி வழக்கு

பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நெடுஞ்சாலைகளில் தனிப்பாதை கோரி வழக்கு

1 mins read
38ba5e59-3924-4a10-971a-c1e646ed02bd
பாத யாத்திரை செல்லும் பக்தர்கள். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் நெடுஞ்சாலைகளில் நடந்து செல்ல வசதியாக தனிப்பாதை ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில் தமிழகத்தில் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரை செல்வதாகவும், பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால், மாலை, இரவு நேரங்களில் அவர்கள் நடந்து செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய, மாவட்ட நெடுஞ்சாலைகளில் போதுமான தடுப்புகள் இல்லை என்பதுடன் வாகனங்களின் அதிக ஒளி வீசும் முகப்பு விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் ராம் குமார் ஆதித்யன் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக தலை, கை, உடைமைகளில் ஒளிரும் பட்டைகள் அளிக்கப்படுகின்றன. இதனால் விபத்துகள் குறையும். திருச்செந்தூரில் தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பத்தடுப்பு வர்ணமூம் பூசப்பட்டுள்ளது.

இதுபோன்ற வசதிகளை பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் அனைத்து சாலைகளிலும் ஏற்படுத்த வேண்டும் என ராம்குமார் ஆதித்யன் தமது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை குறித்து தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்