ஒரு டன் போதைப்பாக்கு பறிமுதல்

ஒரு டன் போதைப்பாக்கு பறிமுதல்

1 mins read
f73e2347-4726-434d-b725-6ef814bb0860
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள். - படம்: ஊடகம்

வேலூர்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு டன் போதைப் பொருள்கள் கைபற்றப்பட்டுள்ளதாவும் வேலூர் காவல்துறை தெரிவித்தது.

போதைப்பாக்கு, பான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதை தரும் பொருள்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. எனினும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் இப்பொருள்கள் சுலபமாக கொண்டு வரப்படுகின்றன.

இதனால் தமிழகம் முழுவதும் இந்த போதைபாக்கு உள்ளிட்ட பொருள்களின் புழக்கம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வீட்டில் ஒரு டன் போதைப்பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. அந்த வீட்டில் இருந்த சுனில், சுனீர்நாத், குமார் ஆகிய மூவரும் கைதாகினர். மேலும் அவர்களிடம் இருந்து மூன்று லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சொகுசு கார், இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கைதான மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்