சென்னை: திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று முட்டித் தள்ளியது.
இச்சமயம் அப்பெண் எருமையின் கொம்புப் பகுதியில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து, அப்பெண்ணை எருமை மாடு தரதரவென இழுத்துச் சென்றதில் அப்பெண் படுகாயமடைந்தார்.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே சாலைகளில் நடந்து செல்பவர்களை மாடுகள், தெரு நாய்கள் தாக்கவதும் பொதுமக்கள் காயமடைவதும் வாடிக்கையாகிவிட்டது.