சென்னை: 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடனான தங்களது கூட்டணி தொடரும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் இணைந்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த ஓபிஎஸ், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக-பாமகவுடனான கூட்டணி தொடர்வது உறுதி,” என்றார்.
சசிகலாவின் அதிரடி வருகை அரசியலில் எவ்விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இதுகுறித்து சசிகலாவிடம்தான் கேட்கவேண்டும்,” என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்.

