சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்களை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம். அங்கு தேர்தல் நடத்தை விதிமீறல்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி. அதன் எம்எல்ஏவாக இருந்த திமுகவின் நா.புகழேந்தி அண்மையில் காலமானார்.
இதையடுத்து அத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஜூலை 10 ஆம் தேதி இத்தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில், ஜூன் 26ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்நிலையில் சென்னையில் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது இடைத்தேர்தலுக்கான பொது, செலவின, காவல்துறை பார்வையாளர்கள் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
மேலும் இந்த இடைத்தேர்தல் பணியில் தேர்தல் ஆணைய ஏற்பாட்டில் 1,324 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன என்றும் சத்யபிரதா சாகு மேலும் தெரிவித்தார்.