ரூ.73.5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.73.5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

1 mins read
28a2faa0-9e11-46d9-b67e-12750019ca97
பற்பசை வடிவில் கடத்தப்பட்ட தங்கம். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

திருச்சி: ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.73.3 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதன்கிழமை நள்ளிரவு திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் மேற்கொண்ட அனைவரும் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த 33 வயதான கார்த்திக் என்ற பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரையும் அவரது உடைமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர்.

அப்போது கார்த்திக் தன் உடலில் பற்பசை வடிவில் 1,074 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அனைத்துலக சந்தை மதிப்பு ரூ.73.30 லட்சமாகும். இதையடுத்து அவர் கைதானார்.

குறிப்புச் சொற்கள்
கடத்தல் தங்கம்பறிமுதல்மதிப்பு