தூத்துக்குடி: வீட்டில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப் பொருளைப் பதுக்கி வைத்த தம்பதியரை தூத்துக்குடி காவல்துறை கைது செய்துள்ளது.
அங்குள்ள இனிகோ நகரில் உள்ள வீட்டில் போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் அங்கு திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் இருந்த நிர்மல் ராஜ், அவரது மனைவி ஆகிய இருவரும் கைதாகினர்.
இருவரும் எட்டு கிலோ எடையுள்ள போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.24 கோடி என்று காவல்துறை தெரிவித்தது.

