நீலகிரி: கோடநாடு கொலை வழக்கில் அனைத்துலக காவல்துறையின் (இன்டர்போல்) உதவி நாடப்பட உள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ் என்பவரின் கைப்பேசிக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து ஐந்து முறை அழைப்பு வந்துள்ளது என்றும் அது குறித்து அனைத்துலக காவல்துறையிடம் விவரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
கோடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை தோட்டத்தில் பங்களா ஒன்று உள்ளது. அங்கு கடந்த 2017ம் ஆண்டு ஒரு கும்பல் நுழைந்து, காவலுக்கு இருந்த ஓம்பகதூர் என்பவரைக் கொலை செய்தது.
மேலும், பங்களாவில் இருந்த சில முக்கியமான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.