கள்ளச்சாராய பலி 55 ஆக உயர்வு; 10 பேருக்குப் பார்வை பறிபோனது

கள்ளச்சாராய பலி 55 ஆக உயர்வு; 10 பேருக்குப் பார்வை பறிபோனது

1 mins read
d26c82d7-e8eb-40f1-a633-e1526fc654ed
கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆடவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. - படம்: ஊடகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு மெத்தனால் எனும் ரசாயனம் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்திய மேலும் மூவர் உயரிழந்தனர். இவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், தற்போது சிகிச்சையில் இருந்து வரும் 10 பேருக்குக் கண்பார்வை பறிபோன தகவலையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சனிக்கிழமை காலை பரமசிவம், கல்யாண சுந்தரம் உள்ளிட்ட மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை கருணாபுரம் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்