கள்ளக்குறிச்சி: இப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கும் கள்ளச்சாராய மரணம், தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிக அதிக அளவிலான உயிரிழப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.
2008ல் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் கள்ளச்சாராயம் அருந்தி 148 பேர் பலியாகினர். இவர்களில் 41 பேர் தமிழர்கள். இந்தச் சம்பவத்தை அடுத்து, 21 காவலர்களைத் தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்தது.
2001ல் பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது. 20 பேருக்குக் கண்பார்வை பறிபோனது. புதுச்சேரியில் இருந்து சில வியாபாரிகள் கள்ளச்சாராயத்தைக் கொண்டுவந்து விற்றதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.