தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த 3 பெண்கள் கார் மோதி உயிரிழப்பு

தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த 3 பெண்கள் கார் மோதி உயிரிழப்பு

1 mins read
85583531-6c14-45bf-b7fd-63aa2c778cb2
தூத்துக்குடி மாவட்டத்தின் முக்காணியில் விபத்து நடந்த பகுதியைப் பார்வையிடும் காவலர்கள். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தூத்துக்குடி: முக்காணி என்னும் சிற்றூரில் சாலையோரத்தில் இருந்த தெருக்குழாயில் சில பெண்கள் தண்ணீர்ப் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த கார், தண்ணீர்ப்பிடித்துக் கொண்டிருந்த ஒரு பெண் மீதும் தண்ணீர் பிடிக்க வரிசையில் காத்திருந்த மூன்று பெண்கள் மீதும் மோதியது.

அந்த நான்கு பெண்களும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் மோதியதில் படுகாயமடைந்த சண்முகத்தாய் என்பவர் மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மணிகண்டன் என்பவரை காவல்துறை கைதுசெய்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்
தூத்துக்குடிசாலை விபத்துஉயிரிழப்பு