சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் விரைவில் புத்தகப் பூங்கா

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் விரைவில் புத்தகப் பூங்கா

கோப்புப்படம்: ஊடகம்

25 Jun 2024 - 2:17 am

1 mins read

சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் அடங்கிய புத்தகப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையின் பரபரப்பான பகுதி என்பதால் இங்கு அமைக்கப்படும் புத்தகப் பூங்காவில் அதிக எண்ணிக்கையிலான வாசகர்களை எதிர்பார்ப்பதாக நூலகத்துறை தெரிவித்துள்ளது.

“புதிய புத்தகப் பூங்காவுக்கு வருகை தருவோரின் வசதிக்காக, நாற்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளும் புத்தகங்கள் படிக்க வசதியான இருக்கை களும் அமைக்கப்படும்.

“மேலும், புத்தகங்களைக் காட்சிப்படுத்தவும் விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இது பயணிகளுக்குப் பயனுள்ளதாக, பொழுதுபோக்காக அமையும்,” என்று நூலகத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த முதல் புத்தகப் பூங்காவுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, சென்னையில் உள்ள இதர மெட்ரோ ரயில் நிலையங்களில் புத்தகப் பூங்கா அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்