ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

கோப்புப்படம்: ஊடகம்

25 Jun 2024 - 2:53 am

1 mins read

ராமேசுவரம்: இலங்கைக் கடற் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடி யாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் பகுதி மீனவர்கள் ஜூன் 24ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

ஜூன் 22ஆம் தேதி ராமேசுவரத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அவர் களின் மூன்று விசைப்படகு களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இலங்கைக் கடற்படையைக் கண்டித்தும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மீன்பிடிப்படகுகள் கடலில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்