விக்கிரவாண்டி: 35 வேட்பு மனுக்கள் தள்ளுபடி

1 mins read
594389c4-b1a0-4bc0-a772-44dc54768122
 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் 35 மனுக்கள் நிராகரிக்கப் படுவதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: ஊடகம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை ஜூன் 24ஆம் தேதி நடைபெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 64 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் 35 மனுக்கள் நிராகரிக்கப் படுவதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஜூன் 25 (இன்று) மாலைக்குள் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனத் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்