சட்டக் கல்லூரிகளில் சட்டத்தமிழ் என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகம்

சட்டக் கல்லூரிகளில் சட்டத்தமிழ் என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகம்

1 mins read
7b21200b-7f0b-4532-b3e7-89d943fd83dc
அமைச்சர் ரகுபதி. - படம்: ஊடகம்

சென்னை: அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டத்தமிழ் என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் இணைவு பெற்ற அரசு சட்டக் கல்லூரிகளில் 2024-25ஆம் கல்வி ஆண்டு முதல் சட்டத் தமிழ் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் வளமேலாண்மை திட்டம் உருவாக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஆறு அரசு சட்ட கல்லூரிகளில் ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் இனி மொத்தம் 480 மாணவர்கள் கூடுதலாக அனுமதிக்கப்படுவர் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

“சீர்மிகு சட்டப்பள்ளி யில் சொத்துரிமை சட்டம், தடயவியல் சட்டம் என இரண்டு புதிய முதுகலை சட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். இத்தகைய பல்வேறு நடவடிக்கைகள் மாணவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும்,” என்றார் அமைச்சர் ரகுபதி.

இந்த அறிவிப்புகளை சட்டத்துறையினர் வரவேற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்