செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

1 mins read
58e35b80-968d-46e7-87b2-ab6aae44515c
செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணையை நான்கு மாதத்தில் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க கடந்த பிப்ரவரியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை முடிக்காத பட்சத்தில் புதன்கிழமை (ஜூன் 26) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அடுத்த நான்கு மாதங்களுக்கு செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கப்படாது என்று தெரிகிறது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து மூன்று முறை பிணை தாக்கல் செய்த நிலையிலும் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை. 41வது முறையாக அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்