புதுடெல்லி: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெள்ளிக் கிழமை (ஜூன் 27) அன்று 234 தொகுதிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சி, வெள்ளிக் கிழமை மற்றும் ஜூலை 3ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது.
மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் நேரில் ஊக்கப்பரிசுகளை வழங்குகிறார்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனிடையே விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் கைப்பேசி, தாள், பேனா உள்ளிட்ட பொருள்கள் எடுத்து வர அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் விஜய் 10 நிமிடங்கள் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், கட்சித் தொடங்கி முதல் முறையாக ஊக்கத்தொகை வழங்கி பேச உள்ளதால் அரசியல் கருத்துகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி படியுங்கள். பணம் வாங்காமல் வாக்களியுங்கள் என பெற்றோருக்கு வலியுறுத்த மாணவர்களிடம் விஜய் கோரிக்கை விடுத்திருந்தார்.

