தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 mins read
ff444439-6720-4a5c-8cae-a9f5c4d53cca
முதல்வர் மு.க.ஸ்டாலின். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்துக்குப் புதிய தொழில் முதலீடுகளைத் திரட்டும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க செல்ல உள்ளதாக, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கையின்போது பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 31 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 7,8ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும் இதற்காக 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

அவற்றுள் இதுவரை 379 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக தென் மாவட்டங்கள், டெல்டா, மேற்கு மண்டலங்களில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

“இந்நிலையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்கிறார். இப்பயணத்திற்கு பிறகு அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன,” என்றார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

குறிப்புச் சொற்கள்