தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய அளவில் முதலிடத்தை நோக்கி முன்னேறிவரும் தமிழகம்: முதல்வர் பெருமிதம்

1 mins read
d13fcc15-3dd2-4429-8c4c-8f67b4848140
முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: இந்திய அளவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதி மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும் சட்டப்பேரவையில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் கோவில் திருவிழாக்கள் எத்தகைய பிரச்சினைகளும் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்றார் அவர்.

“அறிவிக்கப்பட்ட 190 திட்டங்களில் ,179 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அனைத்து வகையான குற்றங்களையும் குறைக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

“எனது அமைச்சரவையில் உள்ள அனைவரது பங்களிப்பால் அரசுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதற்கிடையே, கோடநாடு வழக்குடன் தொடர்புடைய தொலைபேசி அழைப்புகள் குறித்து அனைத்துலக காவல்துறையான ‘இன்டர்போல்’ விசாரிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்