தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேட்பாளர்கள் வாக்காளர்களைச் சந்திக்க முடியாத நிலை: அதிமுக குற்றச்சாட்டு

1 mins read
d7adb7a5-54e2-46c4-b05b-1d6e8ecf41d5
அதிமுக எம்எல்ஏக்கள் சக்கரபாணி (இடது), அர்ஜூனன். - படம்: தமிழக ஊடகம்

விழுப்புரம்: அதிமுக எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அர்ஜூனன் ஆகியோர் விழுப்புரத்திற்கு ஜூலை 1ஆம் தேதி வந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது. இதற்கு உதாரணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் தமிழக அமைச்சர்கள் 33 பேர் ஒவ்வொரு தெருவிலும் சூழ்ந்து கொண்டு மக்களை ஓர் இடத்தில் அடைத்து வைத்து அவர்களை மாலையில் விடுவிக்கின்றனர்.

இதனால் பிரசாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களைச் சந்திக்க முடியாத நிலை உள்ளது. இதுதான் தற்போது விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் அவலமாகும். இப்படிப்பட்டவர்களுக்கு காவல்துறை முழு ஆதரவு அளிக்கின்றது. இதையெல்லாம் முன்பே உணர்ந்துதான் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது,” என்று கூறினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்