சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை கிண்டி பகுதியில் இயங்கி வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று மோப்ப நாய்களின் உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
எனினும் சில மணி நேரம் நீடித்த இந்த தேடுதல் வேட்டையின்போது எந்த வெடிபொருளும் கிடைக்கவில்லை. எனவே அம்மிரட்டல் வெறும் வதந்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

