இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேசுவர மீனவர்கள் தொடர் போராட்டம்

இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேசுவர மீனவர்கள் தொடர் போராட்டம்

1 mins read
60216686-d839-4603-bce7-c86bc39012b4
தமிழக மீனவர்களை சிறைப்பிடித்ததோடு அவர்களின் படகுகளைக் கையகப்படுத்திய இலங்கை கடற்படையினரைக் கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். - படம்: ஊடகம்

ராமேசுவரம்: பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவர மீன்வர்களின் 4 படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியதோடு 25 மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மீனவர்களையும் படகுகளையும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் செவ்வாய், புதன்கிழமைகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அவர்கள் 200க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் கறுப்புக் கொடிகளைக் கட்டியிருந்தனர்.

மேலும், வெள்ளிக்கிழமை பாம்பன் சாலைப் பாலம், மண்டபம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டங்கள் நடத்தப்படும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்