தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜாபர் சாதிக்: என் மீதான வழக்குகள் தவறான உள்நோக்கம் கொண்டவை

1 mins read
935256c1-d891-49f9-a2da-f3cdb78ae72f
போதைப்பொருள் கடத்தல், சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் ஆகிய வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், போதைப்பொருள் கடத்தல் ஆகிய வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக், தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் தவறான உள்நோக்கம் கொண்டவை. மேலும், அந்தக் கைது நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது. எனவே, என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்துச் செய்து தம்மை விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், போதைப்பொருள் கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும், தன் மீது தவறான உள் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதை சட்டப்பூர்வமாக்கும் வகையில், தனக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை, திகார் சிறையில் உள்ள தன்னை அமலாக்கத் துறை வழக்கில் கைது செய்வது தொடர்பாக பிடியாணை பெற்றுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு மீதான விசாரணையை, இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, வெள்ளிக் கிழமைக்கு ஒத்தி வைத்தது.

வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவிலான போதைப் பொருள்களை கடத்தியதாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்