சென்னை: நகர மயமாக்கலுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கடந்த 1991ஆம் ஆண்டு, இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 25.71 விழுக்காடாக இருந்தது. 2011ஆம் ஆண்டு இது 31.16%ஆக உயர்ந்தது என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அதே வேளையில், தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை 2011ஆம் ஆண்டில் 48.45 விழுக்காடு என உயர்ந்து, இந்திய சராசரியைவிட ஏறத்தாழ 17.29% என அதிகரித்திருந்தது.
“இதன் மூலம் நகரமயமாதலில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் நகராட்சிகள் மாநகராட்சியாகவும் வளர்ச்சி பெற்று வருவதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.