சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணமலை முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பல நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.
இது தொடர்பாக அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“இன்றைய தினம், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் டி.கே.தமிழ்நெஞ்சம் தலைமையில், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமைத் திறனாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
“அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்வதோடு, வலிமையான பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகம் என்ற நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

