தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீமான் ஆவேசம்: நானும் அப்படி பேசுகிறேன், கைது செய்வீர்களா

1 mins read
38bae378-9a6a-4c08-b951-35713361eb73
சீமான். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாகப் பேசியதற்காக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சாட்டை துரைமுருகன் பேசியதில் என்ன தவறு? பேசியதற்காக கைது செய்வீர்கள்? சாட்டை துரைமுருகன் பேசியதையே நானும் பேசுகிறேன். என்னை கைது செய்வீர்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பி இருக்கிறார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா போட்டியிட்டுள்ளார். அவரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சாட்டை துரைமுருகனும் பங்கேற்றார்.

சாட்டை துரைமுருகன் பேசும்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் சொந்த ஊருக்கு சென்ற சாட்டை துரைமுருகனை குற்றாலம் அருகே காவல்துறை கைது செய்தனர்.

இதற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கண்டித்துள்ளார்.

“எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுத்து சாட்டை துரைமுருகனை குறிவைப்பது நன்றாக இல்லை. அவர் எந்தக் கட்சியைச் சார்ந்திருந்தாலும் கருத்து சுதந்திரம் உள்ளது. இதனை கண்டிக்கிறேன்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்