பச்சை நிறமாக மாறிய வீராணம் ஏரி நீர்: பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்

பச்சை நிறமாக மாறிய வீராணம் ஏரி நீர்: பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்

1 mins read
325fb452-dea5-46c6-ae23-ccfcb09cc044
பச்சை நிறமாகக் காணப்படும் வீராணம் ஏரித் தண்ணீர்.  - படம்: ஊடகம்

கடலூர்: சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது வீராணம் ஏரி. இந்த ஏரியின் நீர் பச்சை நிறத்துக்கு மாறியுள்ளதை அடுத்து, நீரின் மாதிரியை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் நீர்வளத்துறை அதிகாரிகள்.

ஏரி நீரின் நிறம் மாறியுள்ளது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பசுமைத் தீர்ப்பாயம் விளக்கம் கேட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பை அடுத்த பூதங்குடி பகுதியில் தொடங்கும் வீராணம் ஏரியின் மூலம் 50,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அத்துடன், சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் இந்த ஏரி நீர் பூர்த்தி செய்து வருகிறது.

இந்நிலையில், விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்பட்டு வந்த ஏரியின் நீர் பச்சை நிறத்துக்கு மாறியுள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

நீரைத் தொடர்ந்து பயன்படுத்துவது பாதுகாப்பானதுதானா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி, தெளிவுபடுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்