கோவை இளைஞர் கொலை வழக்கு: 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கோவை இளைஞர் கொலை வழக்கு: 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

1 mins read
6f2bd131-be08-4f80-8cf5-a3a955d8e62b
படம்: - பிக்சாபே

கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் கடந்த 2016 ஏப்ரல் 3ஆம் தேதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக ரத்தினபுரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விக்னேஷ், கார்த்திக், மகேந்திரன், சுரேஷ், கவாஸ்கான், ஜெய்சிங், நவீன், கருப்பு கௌதம், விமல்குமார், விஜய், சைமன் கிறிஸ்டோபர், கௌதம் மற்றும் கலைவாணன் ஆகிய 14 பேரை கைது செய்தனர்.

கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் வழக்கு ஜெய்சிங் உயிரிழந்தார். விஜய் என்பவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

திங்கட்கிழமை (ஜூலை 15) வழங்கப்பட்ட தீர்ப்பில், கருப்பு கௌதம், சைமன் கிறிஸ்டோபர் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. விக்னேஷ் உட்பட இதர 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்