சென்னை: சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.
அதனை ஏற்று இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து இந்திய அதிபர் திரவுபதி முர்மு செவ்வாய்க்கிழமை (ஜூலை16) உத்தரவிட்டார். அதன்படி ஆர்.மகாதேவன், என்.கோட்டீஸ்வர் சிங் விரைவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்பேற்கவுள்ளனர். இந்த இருவரின் நியமனம் மூலம் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.