ஆம்ஸ்ட்ராங் கொலை: வங்கிக் கணக்கு மூலம் கூலிப்படையினருக்கு ரூ.50 லட்சம் அனுப்பிய பெண்மணி

1 mins read
58b1a230-b75c-48d5-9d3a-a49cdd732ab3
ஆம்ஸ்ட்ராங். - படம்: ஊடகம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையை அரங்கேற்றிய கூலிப்படையினருக்கு ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டதாக மேலும் ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் தொகையானது ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு அனுப்பப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், சிறையில் இருந்தபடி ஆம்ஸ்ட்ராங்கை கைப்பேசியில் தொடர்பு கொண்டு குண்டர் கும்பலைச் சேர்ந்த ஒருவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

52 வயதான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி முன்பகை காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் கைதாகினர். பின்னர் அவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

சிறையில் இருந்தபடி ரவுடி நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்குக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஆம்ஸ்டிராங்கை கொலை செய்ய அவரது எதிர் தரப்பு ரூ.50 லட்சம் கொடுத்தது தெரிய வந்தது.

அதிலும் ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து இந்தப் பணம் மற்றொரு கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொலை செய்ய கூலியாக ரூ.50 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் பணப்பரிமாற்றத்தில் தொடர்புள்ள பெண்மணியின் பின்னணி குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்றும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்