சென்னை: தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை குறைந்து மொத்தச் சந்தையில் ரூ.45க்கும் சில்லறைக் கடைகளில் ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்களாகவே தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால், தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து, கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.85க்கும் சில்லறை விற்பனையில் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி விலை திடீரென அதிகரித்ததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளான நிலையில், வியாழக்கிழமை காலை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.

