கிருஷ்ணா நதிநீர்: ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை

கிருஷ்ணா நதிநீர்: ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை

1 mins read
63a9fcd6-738a-4f90-b255-97f6a26fee69
கிருஷ்ணா நதிநீரை உடனடியாக திறக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: காவிரி நீரைப் பெறுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதிநீரை உடனடியாக திறக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் ஏறக்குறைய 80 லட்சம் பேர் வசிப்பதாகவும் பல்வேறு காரணங்களுக்காக நாள்தோறும் சுமார் 20 லட்சம் பேர் மாநகருக்கு வந்து போவதாகவும் கூறப்படுகிறது. இந்த மக்களுக்கான குடிநீர் ஆதாரமாக கிருஷ்ணா நதி நீர் விளங்குகிறது.

எனவே உரிய அளவில் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழக மீன்வளத்துறை ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில், கடந்த 1983ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கிருஷ்ணா நதியிலிருந்து ஆண்டு தோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை மாதந்தோறும் 8,000 மில்லியன் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக அரசாங்கம் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க மறுத்த நிலையில், ஆந்திராவுடனான தண்ணீர் விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்