தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் 9 டி.எஸ்.பி-க்கள் அதிரடி இடமாற்றம்

1 mins read
cc6bf093-125e-4153-8655-61715eee0cd7
ஒன்பது காவல்துறை டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழகத்தின் முக்கிய நகரங்களைச் சேர்ந்த 9 காவல்துறை டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.குத்தாலிங்கம், கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை பயிற்சிக் கழகத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை புறநகர் சப்-டிவிஷன் காவல் டிஎஸ்பியாக இருந்த பாலசுந்தரம், மதுரை காவல் மாவட்ட ஊமச்சிக்குளம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையராக எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த இளஞ்செழியன், மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்