பூந்தமல்லி அருகே தீப்பிடித்து எரிந்த கொள்கலன் லாரி

1 mins read
ad33da4d-3af0-4661-9575-adf824a05fef
சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத் பேட்டையில் ரசாயனப் பொருள்கள் ஏற்றிவந்த கொள்கலன் பற்றி எரியும் காட்சி. - படம்: ஊடகம்

சென்னை: பூந்தமல்லியை அடுத்த நசரத் பேட்டையில் ஒரு கொள்கலன் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரசாயனப் பொருள்களை சிறிய வகை லாரிக்கு மாற்றிய போது தீப்பற்றி எரிந்தது. தீ பரவியதால் பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிக்கும் பரவியது. இரண்டு லாரிகளிலும் தீ கொழுந்துவிட்டு எரிந்தன.

தொழிற்பேட்டையான அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான லாரிகளுக்கும் தீ பரவும் அபாயம் இருந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து தடைபட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்