தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கள் விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் கேள்வி

1 mins read
bf62da01-59cc-4f3e-9b13-e2ac1a464e8f
சென்னை உயர் நீதிமன்றம். - படம்: இணையம்

சென்னை: தமிழகத்தில் கள் விற்பனைக்கான தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், டாஸ்மாக் கடைகளில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் மதுபானங்கள் விற்கப்படுகிறது, ஆனால் குறிப்பிட்ட சில வகை மதுபானங்கள் மட்டுமே கிடைக்கிறது. மேலும், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது. மதுபானங்களை ரேஷன் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், கள் விற்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வில் திங்கட்கிழமை (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுபானங்களை ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் யாரும் தலையிட முடியாது என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தமிழகத்தில் கள் விற்பனைக்கான தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது?’ என கேள்வி எழுப்பினர். டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்கவும் உத்தரவிட்டார்.

இவை தொடர்பாக ஜூலை 29ல் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

குறிப்புச் சொற்கள்