ரூ.5 ஆயிரம் கோடி கோயில் சொத்துகள் மீட்பு: ஸ்டாலின்

1 mins read
55130173-e326-4a6a-b872-7091eaa3ac81
மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

சென்னை: திமுக ஆட்சியில் 1,400க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன; ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மயிலை கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசிய ஸ்டாலின், மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் அறநிலையத்துறையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“அறநிலையத்துறை சார்பில் செயல்படும் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. 1,400க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன; ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகளை மீட்டுள்ளோம். “கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகளைத் துவங்கியுள்ளோம். இறைப் பணியோடு கல்விப் பணியும் செய்து வருகிறோம். அறநிலையத்துறை, அறிவுத் துறையாகவும் செயல்பட்டு வருகிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்