சென்னை: உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், அனைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்கும் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மாணவர்களுக்குச் சான்றிதழ், மடிக்கணினிகளை வழங்கி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது, பாரதிதாசன் இப்போது உயிரோடு இருந்திருந்தால் மாணவர்களை ஓங்கிடும் கீர்த்தி எய்திவிட்டீர்கள் எனப் பாராட்டியிருப்பார்.
மாணவர்கள் உயர்ந்தால் ஆசிரியர்களுக்கும் குழந்தைகள் உயர்ந்தால் பெற்றோர்களுக்கும் பெருமை.
தமிழக மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக உள்ளனர். 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகளவிலான மாணவர்கள் உலகின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலச் செல்கின்றனர்.
தேசிய சட்டப் பயிற்சி நிலையம், விண்வெளித் துறையின் உயர்ந்த கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

